
அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு தானும் தனது கட்சியும் முழுமையாக ஆதரவளிப்பதாகவும், உத்தேச வரைவில் உள்ள அனைத்து திருத்தங்களுக்கும் உடன்படுவதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபகக்ஸவுக்கு எழுதிய கடிதத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மேலும் பல முன்மொழிவுகளை பரிசீலனைக்கு அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment