விதைப்பொதிகள், பயன்தரு மரக் கன்றுகள் மற்றும் இயற்கை உரப்பொதிகள் என்பனவற்றை அரச உத்தியாகத்தர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு விதைப் பொதிகளையும் பயன்தரு மரக்கன்றுகளையும் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைத்தனர்.
நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு வீட்டில் தோட்டங்களை உருவாக்கி அதன் மூலம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்த விதை பொதிகள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.
இயற்கை உரப்பொதிகள், பயன்தரும் மரங்கள் – அரச பணியாளர்களுக்கு வழங்கி வைப்பு!
141
Spread the love
previous post