கதிர்காமத்திற்கான பாதயாத்திரை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து இன்றைய தினம் சனிக்கிழமை காலை ஆரம்பமாகியது,
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று பாத யாத்திரை ஆரம்பமாகியது
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் கதிர்காம கந்தன் ஆலய உற்சவத்தின் போது வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து பாத யாத்திரை சென்று கதிர்காம கந்தனை பக்தர்கள் வழிபடுவது வழமை
இவ்வருடத்திற்கான பாதயாத்திரையில் நூற்றுக்கணக்கான முருக பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்
பாதயாத்திரை பருத்தித்துறை நகரினை சென்றடைந்து பின்னர் A9 வீதி வழியாக கிளிநொச்சியை சென்றடைந்து பின்னர் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தில் கலந்து கொண்ட பின் தொடர்ந்து பாதையாத்திரை நகர்ந்து கதிர்காமத்தை சென்றடையவுள்ளது.