152
பசில் ராஜபக்ஸ இராஜினாமா செய்தமையினால், வெற்றிடமான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஆசனத்திற்கு பிரபல வர்த்தகரும் அமைச்சு ஒன்றின் முன்னாள் செயலாளருமான தம்மிக்க பெரேரா நேற்று (10.06.22) நியமிக்கப்பட்டுள்ளார்.
தம்மிக்க பெரேராவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று பிற்பகல் வர்த்தமானி மூலம் அறிவித்தது.
நேற்று முற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பசில் ராஜபக்ஸவிற்கு பதிலாக மேற்கொள்ளப்படும் நியமனம் தொடர்பில் அறிவித்திருந்தார்.
தம்மிக்க பெரேரா ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love