167
LGBTIQA+ சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாணத்தில் நடைபயணம் ஒன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் LGBTIQA+ சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்குட்படுத்தாத வாழ்தலை நோக்கி குரல் கொடுப்போம் என்ற நோக்கில் வானவில் நடைபயண ஒருங்கிணைவு எனும் தலைப்பில் இந்தப் பேரணி இடம்பெற்றது.
சமத்துவம், சுயமரியாதை, மற்றும் சமூக நீதியை அடிப்படையாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில் பாலின வேறுபாடின்றி பலரும் கலந்து கொண்டனர்.
Spread the love