எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறை அதிகாரிக்கும் இராணுவ அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் எமக்கு கிடைத்துள்ளன.
வரகாபொல தும்மலதெனிய பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரி ஒருவருக்கும் காவற்துறை உத்தியோகத்தருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது இராணுவ அதிகாரி மற்றும் காவற்துறை உத்தியோகத்தருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இராணுவ அதிகாரியினால் தாக்கப்பட்ட காவற்துறை உத்தியோகத்தர் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று வரகாபொல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.