
வெலிகந்த கந்தக்காடு இராணுவ பண்ணைக்கு பின்புறமாக உள்ள மகாவலி ஆற்றின் கிளையாற்றில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த மூவர் முகாமில் இருந்து தப்பிச்சென்தாக ஏற்கனவே காவற்துறையினர் தெரிவித்தனர்.
தப்பியோடிய மூவரில் ஒருவரது சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் ஏறாவூரை சேர்ந்த 19 வயதான இளைஞர் என அடையாளங்காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற இரண்டு சந்தேகநபர்களில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், மற்றவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
Spread the love
Add Comment