நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை எனத் தொிவித்து அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பதவி விலகியுள்ளனர். இதனால் பொரிஸ் ஜோன்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது
பதவி விலகல் முடிவை அறிவித்தது தொடர்பாக ரிஷி சுனக் தொிவிக்கைகையில், அரசாங்கம் சரியாக, திறமையாக மற்றும் தீவிரமாக” நடத்தப்படும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு,” எனத் தெரிவித்தார்.
இதேவேரள “அரசாங்கம் தேசிய நலனுக்காக செயல்படவில்லை என சாஜித் ஜாவித், தெரிவித்துள்ளாா்.
இந்த நிலையில், நாட்டின் புதிய நிதியமைச்சர் பதவிக்கு கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை கவனித்து வரும் நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, பிரதமர் அலுவலக தலைமை நிர்வாகியாக பணியாற்றி வந்த ஸ்டீவ் பார்க்லேவசம் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்மேலும் உயர்கல்வி அமைச்சர் மிஷெல் டோனலன் கல்வி அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.