218
முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் 3 இளைஞர்கள் தாக்கப்பட்டு, நேற்றிரவு(05.07.22) கடத்தப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட இளைஞர்கள் டிப்பர் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்களை கடத்திச் சென்ற டிப்பர், வடிகால் ஒன்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது கடத்தப்பட்ட இளைஞர்களையும் டிப்பருக்குள்ளேயே விட்டுவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவற்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love