பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்று விலகியுள்ளாா். எனினும் புதிய பிரதமர் வரும் வரை தான் பிரதமர் பதவியில் நீடிக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளாா்.
கன்சர்வேடிவ் கட்சித் தலைமைக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. எதிா்வரும் ஒக்டோபரில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு முன்னதாக புதிய பிரதமர் நியமிக்கப்படுவாா். .
இன்று கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து உரையாற்றிய பொரிஸ் ஜோன்சன் , நாடாளுமன்றத்தில் இருக்கும் கன்செர்வேடிவ் கட்சியினர் புதிய தலைவர் வேண்டும் என்று கூறிவிட்டனர். எனவே புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும். எனத் தொிவித்துள்ளாா்.
புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான காலம் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்த பொரிஸ் ஜோன்சன் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை தான் பதவியில் இருக்கப்போவதாக வும் புதிய பிரதமருக்கு தன்னால் முடிந்த ஆதரவை வழங்கவிருப்பதாகவும் தெரிவித்தார்
பிரக்ஸிட்டை நிகழ்த்திக் காட்டியது, பிரிட்டனை பெருந்தொற்றிலிருந்து மீட்டு கொண்டு சென்றது, புதினின் படையெடுப்புக்கு எதிராக மேற்குலகிற்கு தலைமை தாங்கியது என தனது செயல்கள் குறித்து பெருமைப்படுவதாக தொிவித்த பொரிஸ் ஜோன்சன் “தற்போது சில நேரங்களில் இருள் சூழ்ந்திருந்தாலும், நமது எதிர்காலம் ஒன்றாக பொற்காலமானதாக உள்ளது, எனத் தொிவித்துள்ளாா்.
பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத் தொிவித்து அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் செவ்வாய்க்கிழமை மாலையில் பதவி விலகியதனால் பொரிஸ் ஜோன்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.