162
யாழ் நகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நள்ளிரவு திருட்டு தனமாக டீசல் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 2 வான்கள் , லொறி என்பவற்றுக்கு டீசல் திருட்டு தனமாக டீசல் விநியோகித்துக்கொண்டு இருந்தவேளை சிலர் அங்கு கூடி நியாயம் கேட்டுள்ளனர்.
அதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் முரண்பட்டமையால் , காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி அப்புறப்படுத்தி சென்றுள்ளனர்.
Spread the love