பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டு, மறுநாள் கடற்தொழில் நீரியல்வளத்துறையினரால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, மீணவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன், படகு மற்றும் கடற்தொழில் உபகரணங்களை அரசுடமையாக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.