இலங்கையின் நிலைமை தொடர்பில் கலந்துரையாடி அவசரமான தீர்மானத்தை எடுப்பதற்காக, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அவசரமாகக் நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவசர கட்சித.தலைவர்கள் கூட்டமொன்று அழைப்பு விடுத்துள்ளார்.
- இன்று மாலை 4 மணியளவில் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து விலகுமாறு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
- டலஸ் உட்பட மொட்டு கட்சியின் 16 எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் எழுதி, பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
- புதிய பிரதமரின் கீழ் சர்வக்கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு இடமளிக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்டாரத்தில் இடம்பெற்ற அமைதியின்மையில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளதாகவும், காயமடைந்தோரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிசொகுசு வாகன பேரணியொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வெளி வந்த நிலையில் உள்ளது. குறித்த வாகனப் பேரணி பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டவர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்குள்ளும், ஜெனாதிபதி செயலகத்துள்ளும் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை தேடியதாகவும், இதனையடுத்து, ஜனாதிபதி மாளிகையின் நீச்சல் தடாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் நீச்சலில் ஈடுபட்டதாகவும் ஒளிப் படங்கள் வெளியாகி உள்ளன.
வெளி மாவட்டங்களிலிருந்து இதுவரை 54 புகையிரதங்கள் கொழும்பு கோட்டையை சென்றடைந்துள்ளன. எனினும் தற்போதும் பல பிரதான புகையிரத் நிலையங்களில் கூடியிருக்கும் மக்கள், கொழும்புக்கு செல்வதற்காக புகையிரத நிலையங்களில் அமைதியின்மையில் ஈடுபட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்திலிருந்து இரண்டு கப்பல்கள் முக்கியமான சிலரடன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடற்படையினருக்கு சொந்தமான கஜபாகு, சித்திரெல்ல ஆகிய இரண்டு கப்பல்கள் அவசரமாக கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.