இடைக்கால ஜனாதிபதியாக சபாநாயகர் மஹிந்தயாபா அபேவர்தன பதவியேற்பதற்கான சாத்தியக்கூறு உன்னதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரையும் இராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
அந்த வகையில், அரசியலமைப்பின் படி தற்காலிக ஜனாதிபதியாக சபாநாயகர் மஹிந்தயாபா அபேவர்தன பதவியேற்பதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக டுவிட்டர் பதிவில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் இல்லத்தில் அவசர கட்சித் தலைவர் கூட்டம் இன்று மாலை இடம்பெற்றது.
அதில், பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல தலைவர்கள் ஜூம் மூலம் கலந்துகொண்டனர் எனவும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
எனினும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்த பின்னர், தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்துக்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை காரணமாகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பெருமபாலோனோரின் கோரிக்கைக்கு அமைய பதவி விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுத சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.