ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டிலேயே இன்னும் இருக்கின்றார். பிபிசிக்கான நேர்காணலின் போது தான் தவறு செய்துவிட்டேன் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்திய செய்தி சேவையான ஏஎன்ஐ க்கு, தொலைப்பேசி ஊடாக வழங்கிய நேர்காணலிலேயே, தான் பிபிசிக்கு வழங்கிய செய்தியில் , “ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டில் இல்லை அண்மைய நாடொன்றுக்கு சென்றுள்ளார், அவர் புதன்கிழமை நாடு திரும்புவார்” எனத் தொிவித்தனையே மறுத்துள்ளார்.