கொழும்பு, பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக, பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்துவருகின்ற நிலையில் அவா்களைக் கலைப்பதற்காக, காவல்துறையினா் கண்ணீர்ப் புகைக்குண்டுப்பிரயோகமும் நீர்த்தாரை பிரயோகமும் மேற்கொண்டுள்ளனா்.