185
நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. அதன்பின்னர், நாடாளுமன்றத்துக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்த சபாநாயகர், வாக்களிப்பின் போது, முன்மாதிரியாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இடையில் குறுக்கு கேள்விகளை கேட்பதற்கும், விவாதம் நடத்தவும் முடியாது என அறிவுறுத்திய சபாநாயகர், தங்களுடைய கையடக்க தொலைப்பேசியின் ஊடாக, வாக்குச்சீட்டை படம்பிடிக்கக் கூடாது என்றும், அவ்வாறு படம்பிடித்தால் அரசியலமைப்பின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதேபோல வாக்களிக்கும் போதும் கையடக்க தொலைபேசியை எடுத்துவருவது தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றார்.
Spread the love