Home இலங்கைCV – CWC ரணிலுக்கு ஆதரவு!

CV – CWC ரணிலுக்கு ஆதரவு!

by admin

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தனது வாக்கை, பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும், ஜனாதிபதியை தெரிவுசெய்யும் வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது.

நேற்று நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்தியக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க சிறந்த தீர்வாக ரணில் விக்ரமசிங்க இருப்பதாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

நீண்ட கலந்துரையாடலின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் ஆதரவு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்தே ரணில் விக்ரமசிங்கவிற்கு இ.தொ.கா தனது முழுமையான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More