சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என, சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய அலுவலகம் வெளிட்டு்ள ட்விட்டர் பதிவில் கோரப்பட்டுள்ளது.
கொழும்பில் அமைதியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட பகுதியில் காவற்துறையினரும் இராணுவத்தினரும் நடத்திய தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அந்தப்பதிவில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அதிகாரிகள் பொறுமையுடனும் வன்முறையிலிருந்து ஒதுங்கியும் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினொட் வலியுறுத்தியுள்ளார். போராட்டக்களத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.