174
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதனால் வெற்றிடமான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தனவை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் நேற்று (22.07.22) இரவு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினரை நிரப்புவதற்காக ருவன் விஜயவர்த்தனவின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட வஜிர அபேவர்தன, கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love