154
ஆளுங்கட்சியின் விசேட கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை (26.07.22) பிற்பகல் நடைபெறவுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டம் இடம்பெறவுள்ளது.
அவசரகாலச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றும் விடயம் மற்றும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்தும் அங்கு கலந்துரையாடப்படும் என்றும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசரகால சட்ட வர்த்தமானி அறிவித்தலை சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்காக புதன்கிழமை (27.07.22) நாடாளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love