147
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து யாழ் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் எற்பாட்டில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப்பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களுடைய போராட்டத்திற்கு மதிப்பளி, நாட்டை கொள்ளை அடிக்காதே, ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு போன்ற கோஷங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
Spread the love