கொழும்பு விவேகானந்தா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. கொட்டாஞ்சேனை விவேகானந்த வீதியை சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து கரையோர காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்