Home இலங்கை நிலக்சன் உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும்!

நிலக்சன் உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும்!

by admin


ஊடகவியலாளர் நிலக்சனின் 15 ஆம் ஆண்டுநினைவுநாள் – 01.08.2022
ஊடகஅறிக்கை.


யாழ்.பல்கலைக்கழக ஊடககற்கைமாணவனும் ஊடகவியலாளருமானசகாதேவன் நிலக்சன் ஆயுதாரிகளால் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டு இன்று திங்கட்கிழமை 15 ஆவதுஆண்டுநினைவுநாள் ஆகும்.


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகஊடகவளங்கள் மற்றும் பயிற்சிநிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் தமிழ் மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவருமான ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சன் 2007ம் ஆண்டின் இதே நாளன்றுஅதிகாலை 5 மணியளவில் கொக்குவிலில் உள்ளஅவனது வீட்டில் பெற்றோரின் முன்னிலையில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்படடிருந்தான்.


நிலக்சன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (01.08.2022) 15 வருடங்கள் கடந்து சென்றுவிட்டது. எனினும் இன்றுவரை நிலக்சனும் நிலக்சன் போல சுட்டுக் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் போன ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களுக்கான நீதிவிசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவில்லை.


கடந்த 2016 ஆம் ஆண்டுவடக்கு-கிழக்கு ஊடகவியலாளர்கள் சிறிலங்கா நாடாளுமன்றில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் அப்போதைய ஊடகஅமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்து படுகொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களுக்கான நீதிவிசாரணைப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குமாறு கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.


எனினும் ஊடகவியலாளர்களது கோரிக்கைக் கடிதத்தை அன்றைய பிரதமரும் இன்றைய ஜனாதிபதியுமாகிய ரணில் விக்கிரமசிங்க இறுகிய முகங்களோடு வாங்கிய நிகழ்வை எவரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.


பின்னராகவும் யாழ்ப்பாணத்தில் வடக்கு ஊடகவியலாளர்களை சந்திக்கையில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க போதிய விசாரணையாளர்களில்லாதிருப்பதாக விளக்கமளித்துமிருந்தார்.

எனினும் இத்தனைஆண்டுகள் கடந்த நிலையிலும் அடையாளத்திற்கேனும் ஒருதமிழ் ஊடகவியலாளரது படுகொலை தொடர்பிலும் எந்தவொரு விசாரணையும் ஆரம்பிக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.


ஒருஊடகவியலாளரின் படுகொலைக்கான நீதிவிசாரணைக்கே முன்வராத அரசினைத்தான் தமிழ்த் தேசியம் பேசுகின்ற அரசியல் தலைமைகள் நல்லாட்சி என பாதுகாத்தார்கள். தற்போது சர்வகட்சிஅரசு என பாதுகாப்பு அரணமைக்க காத்துக் கிடைக்கிறார்கள்.


அந்த அரசிடம்தான் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களுக்கான நீதியையும் காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கான நீதி விசாரைணையையும் அவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.


நிலக்சன் கொல்லப்பட்டு இன்றோடு பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டது. ஆனால் இந்தவி டயங்களில் தென்னிலங்கை ஊடகஅமைப்புக்களும் சர்வதேச ஊடகம்சார் மற்றும் சாராதஅமைப்புக்களும் ஊடகவிலாளர்களின் மரணத்தின் போது கண்டன தெரிவிப்பதென்பதை தாண்டி எதனையும் செய்து முடிக்க முடியாதேயிருக்கின்றன.

தங்கள் உயிர்களைத் துச்சமாக்கி மரணித்துப் போன ஊடகர்களின் குடும்பங்கள் என்ன செய்கிறன. அவர்களது எதிர்காலம் அவர்களிற்கான நீதிபோன்ற விடயங்களில் மௌனித்துப் போனவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர்.

நிலா, ஆயுதம் ஏந்தியபோராளி அல்ல. அவன் பேனா தூக்கி எழுத்துக்களால் சாதிக்கத் துடித்தஒரு பேனாப்போராளி. ஊடகத்துறையில் சாதிக்க களம் புகுந்து படுகொலை செய்யப்பட்வர்களில் நிலக்சனும் ஒருவன்.

இலங்கையின் கறைபடிந்த ஊடக ஐனநாயகத்தில் பக்கங்களில் நிலாவின் மணமும் ஒருசகாப்தம்.


‘தூயவை துணிந்தபின் பழிவந்து சேர்வதில்லை’-ச. நிலக்ஸன் அடிக்கடி கூறிக்கொள்ளும் வாசகத்தைஅவனது 15வது ஆண்டைய நினைவுநாளில் யாழ்.ஊடகஅமையம் மீண்டுமொருமுறைநினைவுகூருகின்றது.

வெளியீட்டுபிரிவு
யாழ்.ஊடகஅமையம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More