கோட்டா கோகம போராட்டக்களத்தின் முக்கியச் செயற்பாட்டாளரும் சமூக செயற்பாட்டாளருமான ‘ரட்டா’ எனப்படும் ரதிந்து சேனாரத்னக்கு கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
மே மாதம் 21 ஆம் திகதி கொழும்பு வங்கி வீதி பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் கொழும்பு மத்திய பிரிவின் குற்றவியல் விசாரணை பிரிவினால் ரதிந்து சேனாரத்ன கைது செய்யப்பட்டிருந்தார்.
கொழும்பு குற்றவியல் பிரிவினா்அவரிடம் நேற்று சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றிருந்ததுடன் அவருக்கெதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று வௌிநாட்டு பயணத்தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.