171
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளனர்.
பருத்தித்துறை இன்ப சிட்டி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் மற்றும் பலாலியை சேர்ந்த ஜெசிகரன் ஆகிய இருவரே கரையொதுங்கியுள்ளனர்.
விசாரணைகளின் போது , தாம் கடந்த 31ஆம் திகதி மாலை பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டதாகவும் , தமது படகு கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்ததால் தாம் இருவரும் நீந்தி தமிழக கரையோரத்தை அடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இருவர் தொடர்பிலும் தமிழக காவல்துறையினா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love