184
வெள்ளவத்தை- டபிள்யு.ஏ.டி. சில்வா மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் தப்பிச் சென்றுள்ளதாக வெள்ளவத்தை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி நேற்று (2)அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் 3 நாட்களுக்கு முன்னரே அவா் ரன்முத்துகல சிறுவர் காப்பகத்திலிருந்து வெள்ளவத்தை சிறுவர் காப்பகத்துக்கு அழைத்து வரப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 வயதான குறித்த சிறுமி, தியகடுவ, மஹகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்துள்ள வெள்ளவத்தை காவல்துறையினா் சிறுமியைத் தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love