166
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குழு நேற்று (10.08.22) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது.
இலங்கை எதிர்கொள்ளும் சவாலான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் பங்காளியாக செயற்படுவதாக தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
சிவில் மனித உரிமைகளும் கருத்துச் சுதந்திரமும் முக்கியமானவை என அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இதேவேளை, ஜீ.எஸ்.பி பிளஸ், ஐ.எம்.எப் மற்றும் மனித உரிமைகள் பேரவையில் தற்போது முன்னெடுக்கப்படும் பிரதான செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குழு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
Spread the love