
245 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கொலம்பியாவில் இருந்து QR 662 என்ற விமானத்தில் வந்துள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தொலைநகல் இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் காகித உருளைகளில் மறைத்து வைத்து சுமார் 05 கிலோ கிராம் போதைப்பொருளை கொண்டு வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக காவற்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
Spread the love
Add Comment