மே மாதம் 09 ஆம் திகதியும் அதற்கு பின்னரும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விசேட விசாரணைகள் நாளை (19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ( SLHRC) அறிவித்துள்ளது.
விசாரணைகளுக்கு தேவையான வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக, தீ மூட்டப்பட்ட மற்றும் சேதமாக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களில் நாளாந்தம் 5 பேரை அழைக்கவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க குறிப்பிட்டார்.
இந்த விசாரணைகளுக்கான ஆணைக்குழுவினூடாக விசேட அதிகாரிகள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 09 ஆம் திகதியும் அதற்கு பின்னரும் இடம்பெற்ற வன்முறைகளால் வீடுகள் மற்றும் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டமை தொடர்பில் சுமார் 100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க குறிப்பிட்டார்.