227
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வட திசையில் குபேர வாயில் கோபுரத்திற்கு உட்புறமாக புதிதாக நிர்மானிக்கப்பட்ட “குபேர திக்கு, குமார வாசல்” கோபுர கலாசாபிசேகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கார்த்திகை உற்சவமாகும்.
காலை, இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஆறுமுக பெருமான் பக்தர்கள் மத்தியில் எழுந்தருளி அருட்காட்சி அளித்தார்.
தொடர்ந்து கோபுர கலாசாபிசேகம் இடம்பெற்றது. அதன்போது பல நூற்றுக் கணக்காணோர் கலந்து கொண்டு ஆறுமுக பெருமானை தரிசித்தனர்.
Spread the love