சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு ஒன்று எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்புக்கு செல்லவுள்ளது. இக்குழுவானது எதிா்வரும் 24 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இலங்கை அதிகாரிகளுடன் பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள், கொள்கைகள் குறித்து ஆராயவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஸ்ட தூதுவர் பீற்றர் புருயர் மற்றும் இலங்கை குழுவின் தலைவர் மசாஹிரோ நொசாகி ஆகியோர் தலைமையில் இந்தக் குழு வழிநடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
அதேவேளை தமது குழுவின் இலங்கைக்கான பயணத்தின் போது கடனாளிகளிடமிருந்து போதிய உத்தரவாதத்தை எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கை முகங்கொடுக்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவிப் பொதியை அறிமுகப்படுத்துவதற்கான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கைக்கான தமது குழு பயணத்தினை மேற்கொள்ளவுளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவதற்கு , இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குநரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் அவசியமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது