184
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டை காரைநகர் பகுதியில் விற்பனை செய்த நபர் ஒருவரை காவல்துறை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 1200 சிகரெட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபரும் , மீட்கப்பட்ட சிகரெட்டுகளும் ஊர்காவற்துறை காவல்துறையினரிடம், காவல்துறை விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை காவல்துறையினா் முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love