180
யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் இன்றைய தினம் காலை பலத்த மழை பெய்தது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் காலை இடம்பெற்ற நிலையில் , தேர் இழுத்து முருகப்பெருமான் ஆலயத்தினுள் சென்ற சில நிமிடங்களில் நல்லூர் ஆலய சூழலில் கடும் மழை பொழிந்தது.
தேர்த்திருவிழாவிற்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திடீர் மழை காரணமாக சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தமையால் மழைக்கு ஒதுங்க இடமின்றி பலரும் மழையில் நனைந்தவாறே ஆலய வீதிகளில் நின்றனர்.
குறிப்பாக காவடி எடுத்த பலரும் மழையில் நனைந்தவாறே காவடி ஆடி சென்றனர்.
Spread the love