154
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
கோண்டாவில் புகையிரத பகுதியில் குறித்த நபர் நடமாடுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 27 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் பெற்றுக்கொண்ட 75 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
Spread the love