162
மட்டக்குளியில் நேற்று (29) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவா் உயிரிழந்துள்ளாா். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
26 வயதான ரணவக்க ஆராச்சிலாகே ஹசித சதுரங்க என அழைக்கப்படும் “அலிவத்தே ஹசித” என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் போதைப்பொருள் தொடர்பில் ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் எனவும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்
Spread the love