ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர கடனுதவி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் . தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் இந்த கடன் உதவிக்காக திருப்பி விடப்பட்டுள்ளதாக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், ஏழைகளுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கவும் இதனூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது