சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நித்தியானந்தாவுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அதற்கான மருத்துவ உபகரணங்கள் கைலாசாவில் இல்லை என்பதனால் அவருக்கு அடைக்கலம் வழங்குமாறு கைலாசாவின் வெளியுறவுத்துறை அமைச்சா் , இலங்கை ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
அதேவேளை மருத்துவத்துவ செலவுகள் அனைத்தைம் தாம் வாழ்ந்து வரும் சொர்க்கப்பூமியான கைலாசம் ஏற்றுக்கொள்ளும் எனவம் தமது கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தொிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே நித்தியானந்தாவிடம் இருந்து தமககு எந்த கடிதங்களும் கிடைக்கவில்லை எனவும் அந்தச் செய்தியில் உண்மையில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது