Home இலங்கையாழில்.பாணின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை – அதிகரித்தால் சலுகைகள் நிறுத்தப்படும்!

யாழில்.பாணின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை – அதிகரித்தால் சலுகைகள் நிறுத்தப்படும்!

by admin

யாழில் பாணின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை. அதனையும் மீறி பாணினின் விலையை அதிகரித்தால், வெதுப்பக உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு வெதுப்பாக உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி குணரட்ணம் தெரிவித்தார் .

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாண் விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் .

 மேலும் தெரிவித்ததாவது ;

 யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வெதுப்பகங்களுக்கு, பிறீமா நிறுவனத்தின் கோதுமை மா வழங்கப்படுகிறது . அது தொடர்ச்சியாக வழங்கப்படும் . அதன் விலையில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.12 ஆயிரத்து 500 ரூபாவிற்கு பிறீமா நிறுவனத்தினரால் எமக்கு மா வழங்கப்படுகின்றது .

இந்நிலையில்,  கொழும்பில் பாணின் விலை உயர்த்தப்படுவதற்காக யாழ்ப்பாணத்தில் பாணின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை . 

எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 200 ரூபாய்க்கு மேல் பாணின் விலையினை அதிகரிக்க தேவையில்லை . அவ்வாறு யாராவது பாணின் விலையினை அதிகரித்து விற்றால் அவர்களுக்குரிய எரிபொருள் மற்றும் எரிவாயு பெறுவதற்கான சலுகைகள் நீக்கப்படக்கூடிய சாத்திய கூறுகள் காணப்படுகின்றன .

யாழ்.மாவட்ட செயலரின் பணிப்பின் பேரில் அதிகாரிகள் பாணின் விலை தொடர்பில் கண்காணிப்பார்கள். அவ்வாறு கண்காணித்து அதிக விலைக்கு பாண் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சலுகைகள் நிறுத்தப்படக்கூடிய சாத்திய கூறுகள் உள்ளன .

 வெதுப்பக உரிமையாளர்கள் யாருக்காவது கோதுமை மா தேவைப்பட்டால் எமது சங்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களுக்குரிய மாவினை கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக் கொடுக்க முடியும் . அதனால் அதிக விலைக்கு பாணினை விற்க வேண்டிய தேவை இல்லை – என்றார் .

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More