196
குருநாகலில், கால்வாய்க்குள் விழுந்து 14 வயது மாணவன் ஒருவாட உயிரிழந்துள்ளாா். பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த குறித்த மாணவன், வாகனம் ஒன்றுக்கு இடமளிப்பதற்காக வீதிக்கு அருகில் சென்றபோது, கால்வாய்க்குள் தவறி விழுந்துள்ளாா்.
ஒரு மணித்தியாலமாக கால்வாய்க்குள் சிக்கியிருந்த மாணவன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்துள்ளாா்.
குறித்த மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
Spread the love