144
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப்பீடத்தில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் சம வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான ஆதரவு நிலையம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
கலைப் பீட கட்டடத் தொகுதியின் கீழ்த் தளத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான ஆதரவு நிலையம் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
Spread the love