172
இலங்கைக்கு மேலும் 60 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.
விவசாயிகளுக்கு உரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக மேலதிகமாக 40 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்படும் என நேற்றையதினம் அறிவித்திருந்த நிலையில் அதற்கு மேலதிகமாக 20 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் இலங்கைக்கு மொத்தம் 60 மில்லியன் டொலர் உதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love