ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து செவ்வாய்க்கிழமை(13) இரவு நிந்தவூர் காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் சந்தேக நபர் கைதானார்.
இவ்வாறு கைதான நபர் நிந்தவூர் 9 பகுதியை சேரந்த 36 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 3 கிராம் 600 மில்லிகிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் நிந்தவூர் காவல்துறையினரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.