Home இலங்கைஅரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது!

அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது!

by admin

அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையை வீழ்ச்சியடையச் செய்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான நெருக்கடியை அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களால் தீர்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பொதுவான வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் இதுவரை குறிப்பிடவில்லை என இதன்போது உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More