176
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் “சாதா” எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
குறித்த பாடசாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் போதைப்பொருள் விற்பனை இடம்பெற்று வருவதாக மானிப்பாய் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் கடையில் சோதனையிட்ட போது ஒரு தொகை சாதா எனும் போதை பொருளை கைப்பற்றினர்.
அதனை அடுத்து கடை உரிமையாளரை கைது செய்த காவல்துறையினர் , மீட்கப்பட்ட போதைப்பொருளையும் கைது செய்யப்பட்ட நபரையும் காவல் நிலையம் கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love