வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவரும், சமூகசெயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் ஆகியோா் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் இன்று (22) பிணையில் செல்ல அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களின் 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும் நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி நேற்று (21) முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் போராட்டம் மேற்கொண்டமைக்காக தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்bருந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் இருதரப்பு சட்டதரணிகளின் வாதங்களையுஞம் அடுத்து இரண்டுபேரையும் தலா இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்த நீதவான் வழக்கினை 2023 பெப்ரவரி இரண்டாம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதுடன் அன்றையதினம் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினை மன்றில் பதிலளிக்குமாறு ம் உத்தரவிட்டுள்ளாா்