235
வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த பெருந் திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெறவுள்ள நிலையில் எதிர்வரும் 7ஆம் திகதி சப்பரத்திருவிழாவும் , மறுநாள் 08ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 09ஆம் திகதி சமுத்திர தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது
Spread the love