163
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பால் புரைக்கேறியதில் 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குழந்தைக்கு பால் கொடுத்த போது பால் புரைக்கேறியதில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
அதனை அடுத்து பெற்றோர் அம்பன் வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டுசென்ற போது , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை உயிரிழந்துள்ளது என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
Spread the love