
யாழ்ப்பாணத்தில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இன்று அதிகாலை உயிரிழந்தார் என்று இளவாலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
“கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் பயன்படுத்தியதனால் உயிரிழந்தார்.
மருத்துவ பரிசோதனையிலும் அவரது உயிரிழப்புக்கு ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக் கொண்டமையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கூலிக்காக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்” என்றும் காவல்துறையினர் கூறினர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 10இற்கும் மேற்பட்டோர் ஹெரோயினுக்கு அடிமையாகி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment