143
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி இயந்திரம் செயலிழந்துள்ளது. இதன் காரணமாக மின்வெட்டு காலம் நீடிக்கப்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 03 ஆவது மின் உற்பத்தி இயந்திரத்தை மீளப் பெறுவதற்கு 03 முதல் 05 நாட்கள் வரை ஆகும் என டுவிட்டரில் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர எரிபொருள் மின்நிலையங்களை பயன்படுத்தி நிலைமையை நிர்வகிப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து தற்போது ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love